ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி: விதர்பா அணிக்கு 538 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை


ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி: விதர்பா அணிக்கு 538 ரன்களை இலக்காக நிர்ணயித்தது மும்பை
x

மூன்றாம் நாள் முடிவில் விதர்பா அணி விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்துள்ளது

மும்பை,

89-வது ரஞ்சி கோப்பை தொடரின் இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை - விதர்பா அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற விதர்பா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய மும்பை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஓரளவு சிறப்பாக விளையாடி அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.ஆனால் அதனை சரியாக பயன்படுத்தாத பின் வரிசை வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். பின் வரிசையில் ஷர்துல் தாகூர் அதிரடியாக விளையாடி அணி நல்ல நிலையை எட்ட உதவினார். 37 பந்துகளில் அரை சதமடித்த அவர் 75 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியில் மும்பை முதல் இன்னிங்சில் 224 ரன்களில் ஆல் அவுட் ஆனது. விதர்பா தரப்பில் யாஷ் தாகூர் மற்றும் ஹர்ஷ் துபே தலா 3 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய விதர்பா அணி மும்பை பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மும்பையின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத விதர்பா அணி தனது முதல் இன்னிங்சில் 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்களில் சுருண்டது. விதர்பா தரப்பில் அதிகபட்சமாக யாஷ் ரத்தோட் 27 ரன்கள் அடித்தார்.மும்பை தரப்பில் தவால் குல்கர்னி, தனுஷ் கோட்யான், ஷாம்ஸ் முலானி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஷர்துல் தாகூர் 1 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து 119 ரன்கள் முன்னிலையுடன் மும்பை அணி தனது 2வது இன்னிங்சை ஆடியது . முஷீர் கான் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவருக்கு உறுதுணையாக ரகானே அரை சதமடித்து 73 ரன்னில் ஆட்டமிழந்தார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷ்ரேயஸ் அய்யர் 95 ரன்னில் வெளியேறினார். ஷம்ஸ் முலானி 50 ரன்னில் அவுட்டானார்.இறுதியில், மும்பை அணி 2வது இன்னிங்சில் 418 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.விதர்பா சார்பில் ஹர்ஷ் துபே 5 விக்கெட்டும், யாஷ் தாகூர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் 538 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

மூன்றாம் நாள் முடிவில் விதர்பா அணி விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்துள்ளது.இன்னும் இரு நாட்கள் மீதமுள்ள நிலையில் விதர்பா அணி வெற்றிபெற 528 ரன்கள் தேவைப்படுகிறது.


Next Story