உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: இந்திய அணியின் பிளேயிங் லெவன் இது தான் - இந்திய முன்னாள் வீரர்


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: இந்திய அணியின் பிளேயிங் லெவன் இது தான் - இந்திய முன்னாள் வீரர்
x

Image Courtesy: @ICC

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.

மும்பை,

2வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி ஜூன் மாதம் 7ம் தேதி இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன.

இந்திய அணி வீரர்கள் (ஐபிஎல்லில் பங்கேற்காத வீரர்கள்) டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். 2013ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்கு பின்னர் இந்திய அணி எந்த ஒரு ஐசிசி கோப்பையும் வென்றதில்லை என்ற நீண்ட கால சோகத்துக்கு முடிவு கட்டும் எண்ணத்துடன் ஆட உள்ளது.

இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் ஆடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை இந்திய முன்னாள் வீரரும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான ரவிசாஸ்திரி கூறியுள்ளார். இதில் அவர் தொடக்க ஆட்டக்காரகளாக ரோகித் மற்றும் கில் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

தொடர்ந்து 3,4,5 வது வரிசையில் புஜாரா, கோலி, ரஹானே ஆகியோரும், விக்கெட் கீப்பராக கே.எஸ்.பரத்தையும் தேர்வு செய்துள்ளார். மேலும் ஆல் ரவுண்டர்களாக ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ரவிச்சந்திரன் அஷ்வினையும் தேர்வு செய்துள்ளார். அந்த அணியில் பந்து வீச்சாளர்களாக ஷமி மற்றும் சிராஜ் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

வேகப்பந்து வீச்சுக்கு உகந்த இங்கிலாந்து ஆடுகளத்தில் அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரையும் ஒரு சேர அணியில் ஆட வைப்பது குறிப்பிடத்தக்கது.

ரவி சாஸ்திரி தேர்வு செய்துள்ள இந்திய அணி:-

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், செத்தேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்கியா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ்.




Next Story