டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பெற வேண்டும்... கூறும் ரிக்கி பாண்டிங்


டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பெற வேண்டும்... கூறும் ரிக்கி பாண்டிங்
x

கோப்புப்படம் 

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பெறவில்லையெனில் நான் மிகவும் ஆச்சரியமடைவேன் என்று ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

மும்பை,

மும்பை, டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணியில் இடம் பிடிப்பதற்காக இளம் வீரர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், சீனியர் வீரரான தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக், நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக சிறப்பாக விளையாடினார். அவர் பேட்டிங்கில் 183.33 ஸ்ட்ரைக் ரேட்டில் 330 ரன்கள் எடுத்தார். இதனால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் அவர் இடம் பிடித்தார். இதன் மூலம் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கார்த்திக் இந்திய அணியில் இணைந்தார்.

இந்த சூழலில், டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இல்லை எனில், நான் மிகவும் ஆச்சரியப்படுவேன் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்க் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, தினேஷ் கார்த்திக், ஐபிஎல் லில் தனது ஆட்டத்தை வேறொரு நிலைக்கு எடுத்துச்சென்றார். அவர் ஆட்டத்தை முடித்த விதம் அற்புதமாக இருந்தது. ரிஷப் பந்த் விக்கெட் கீப்பராக செயல்படுவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால் தினேஷ் கார்த்திக் 5 மற்றும் 6 ஆவது இடத்தில் அபாயகரமான பேட்ஸ்மேனாக திகழ்வார் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ரிவ்யூ என்ற நிகழ்ச்சியில் பாண்டிங் கூறினார்.


Next Story