மீண்டும் டி20 போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவித்த ரோகித் சர்மா , விராட் கோலி..!
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய அணியை தேர்வு செய்ய இன்று தேர்வுக்குழு கூடுகிறது.
புதுடெல்லி,
கடந்த 2022-ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு ரோகித் சர்மா , விராட் கோலி டி20 போட்டிகளில் விளையாடவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் ஏற்பட்ட மோசமான தோல்விக்கு பிறகு இருவரும் எந்த டி20 போட்டிகளிலும் ஆடவில்லை.
இந்த நிலையில் டி20 போட்டிகளில் விளையாட தாங்கள் தயாராக இருப்பதாக பிசிசிஐயிடம் ரோகித் மற்றும் கோலி கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்காரணமாக ஆப்கானிஸ்தான் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வதில் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழு குழப்பத்தில் உள்ளது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய அணியை தேர்வு செய்ய இன்று தேர்வுக்குழு கூடுகிறது. இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையேயான மூன்று டி20 போட்டிகள் ஜனவரி 11, 14 மற்றும் 17-ந்தேதிகளில் மொகாலி, சங்கர்பூர் (மேற்கு வங்காளம்), பெங்களூரில் முறையே நடக்கிறது.
நடப்பாண்டு ஜூன் மாதம் டி20 உலகக்கோப்பை நடைபெற உள்ள நிலையில் மீண்டும் டி20 போட்டிகளில் விளையாட ரோகித் சர்மா , விராட் கோலி விருப்பம் தெரிவித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.