ஐ.பி.எல்; ரோகித் தற்போது எந்த அழுத்தமும் இல்லாமல் சுதந்திரமாக பேட்டிங் செய்ய முடியும் - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்


ஐ.பி.எல்; ரோகித் தற்போது எந்த அழுத்தமும் இல்லாமல் சுதந்திரமாக பேட்டிங் செய்ய முடியும் - ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்
x

Image Courtesy: ANI

வரும் ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்பட உள்ளார்.

மும்பை,

2024ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோத உள்ளன. இந்த ஆட்டம் சென்னையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த வருட ஐ.பி.எல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா செயல்பட உள்ளார்.

கடந்த இரு வருடங்களாக குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த பாண்ட்யாவை இந்த வருடம் மும்பை அணி வாங்கி அவரை கேப்டனாக நியமித்துள்ளது. மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோகித் சர்மா ஒரு சாதாரண வீரராக மட்டும் செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த முடிவால் கேப்டன்ஷிப் பாரம் எதுவும் இல்லாமல் சுதந்திரமாக அழுத்தமின்றி விளையாடும் நல்ல விஷயம் ரோகித் சர்மாவுக்கு கிடைத்துள்ளதை ரசிகர்கள் பார்க்க வேண்டும் எனவும், ரோகித் தற்போது எந்த அழுத்தமும் இல்லாமல் சுதந்திரமாக பேட்டிங் செய்ய முடியும் எனவும் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆரோன் பின்ச் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

மும்பை மற்றும் இந்திய அணிக்காக கடந்த பல வருடங்களாக விளையாடியதைப் போல இம்முறை ரோகித் சர்மா சாதாரண பேட்ஸ்மேனாக நடந்து செல்ல வேண்டும் என்பது மட்டுமே சவாலாக இருக்கும் என்று நினைக்கிறேன். இது அவருடைய தோளில் உள்ள பாரத்தை துடைத்து விட்டது.

நீங்கள் அணியைத் தலைமை தாங்கும் போது ஒரு கேப்டனாக தொடர்ந்து அனைத்து இடத்திற்கும் செல்ல வேண்டும். ஆனால் ரோகித் சர்மாவால் தற்போது அந்த அழுத்தம் எதுவும் இல்லாமல் சுதந்திரமாக பேட்டிங் செய்ய முடியும். இது தனிப்பட்ட முறையில் ரோகித் சர்மாவுக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் நன்மையை கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story