காஷ்மீரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரரை நேரில் சென்று பார்த்த சச்சின் டெண்டுல்கர்


காஷ்மீரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரரை நேரில் சென்று பார்த்த சச்சின் டெண்டுல்கர்
x

Image Grab On Video Posted By @sachin_rt

காஷ்மீர் சென்றுள்ள சச்சின் டெண்டுல்கர், அமீரை சந்தித்துப் பேசி, பேட் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

காஷ்மீர்,

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், வாகாமா கிராமம் பிஜ்பெஹாராவைச் சேர்ந்தவர் அமீர் உசேன் (வயது 34). இவர் ஒரு மாற்றுத் திறனாளி கிரிக்கெட் வீரர் ஆவார்.இவர் தனது தோள்பட்டைக்கும் கழுத்துக்கும் இடையில் பேட்டைப் பிடித்து பேட்டிங் செய்தும், கால்களை வைத்து பவுலிங் செய்தும் வருகிறார். தனது திறமையினால் தற்போது பாரா கிரிக்கெட் அணியின் கேப்டனாக அமீர் உசேன் உயர்ந்துள்ளார்.

இவர் தனது 8 வயதில் ஆலையில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு கைகளையும் இழந்துள்ளார். இந்நிலையில், கழுத்தில் பேட்டைப் பிடித்து கிரிக்கெட் விளையாடிய அமீரின் வீடியோ அண்மையில் வைரலானது.

அவரைப் பாராட்டி சச்சின் டெண்டுல்கர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். முன்னதாக பேட்டி ஒன்றில் சச்சினை சந்திக்க ஆசை என அமீர் கூறியிருந்தார். அதனை நிறைவேற்றும் விதமாக, காஷ்மீர் சென்றுள்ள சச்சின் டெண்டுல்கர், அமீரை சந்தித்துப் பேசினார். மேலும் அவருக்கு பேட் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.


1 More update

Next Story