ராஜஸ்தான் அணிக்காக புதிய சாதனை படைத்த சஞ்சு சாம்சன்


ராஜஸ்தான் அணிக்காக புதிய சாதனை படைத்த சஞ்சு சாம்சன்
x

ஐபிஎல்-லில் ராஜஸ்தான் அணிக்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் சஞ்சு சாம்சன் முதலிடத்தில் உள்ளார்.

சென்னை,

ஐபிஎல் தொடரில் நேற்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் சாம்சன் 32 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார். இதில் மூன்று பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்சர்கள் அடங்கும். இதன் மூலம் ராஜஸ்தான் அணிக்காக அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் சஞ்சு சாம்சன் முதல் இடத்தை பிடித்தார்.

அவர் 115 போட்டிகளில் 29.76 சராசரியிலும் 139.10 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 3,006 ரன்கள் எடுத்துள்ளார். இதில் இரண்டு சதங்கள் மற்றும் 16 அரைசதங்கள் அடங்கும். இதில் அவரது அதிகப்பட்ச ஸ்கோர் 119 ரன்கள் ஆகும்.

ராஜஸ்தான் அணிக்காக அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் அஜிங்க்யா ரஹானே (100 போட்டிகளில் 2,810 ரன்கள்), ஜோஸ் பட்லர் (63 போட்டிகளில் 2,508), ஷேன் வாட்சன் (78 போட்டிகளில் 2,372 ரன்கள்) மற்றும் ராகுல் டிராவிட் (46 போட்டிகளில் 1,276 ரன்கள்) ஆகியோர் உள்ளனர்.


Next Story