சான்ட்னெர், பெர்குசன் அபார பந்துவீச்சு...ஆப்கானிஸ்தானை வீழ்த்தி 4வது வெற்றியை பதிவு செய்த நியூசிலாந்து...!


சான்ட்னெர், பெர்குசன் அபார பந்துவீச்சு...ஆப்கானிஸ்தானை வீழ்த்தி 4வது வெற்றியை பதிவு செய்த நியூசிலாந்து...!
x

Image Courtesy: @ICC

நியூசிலாந்து அணி தரப்பில் சான்ட்னெர், பெர்குசன் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

சென்னை,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் மிகச்சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைப்பெற்ற லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் சென்னையில் ஆடின.

இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணி தரப்பில் வில் யங் 54 ரன், டாம் லேதம் 68 ரன், க்ளென் பிலிப்ஸ் 71 ரன் எடுத்தனர்.

இதையடுத்து 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களம் இறங்கியது. ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய குர்பாஸ் 11 ரன், இப்ராகிம் ஜட்ரான் 14 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

இதையடுத்து களம் இறங்கிய ரஹ்மத் ஷா 36 ரன், ஹஸ்மத்துல்லா ஷாகிடி 8 ரன், ஓமர்சாய் 27 ரன், நபி 7 ரன், ரஷீத் கான் 8 ரன், முஜீப் 4 ரன், நவீன் 0 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 34.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 139 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 149 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நியூசிலாந்து அணி தரப்பில் சான்ட்னெர், பெர்குசன் தலா 3 விக்கெட்டும், பவுல்ட் 2 விக்கெட்டும், ஹென்றி, ரவீந்திரா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி புள்ளிபட்டியலில் 8 புள்ளிகளுடன் முதல் இடத்திற்கு முன்னேறியது.


Next Story