ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களை கடந்து சுப்மன் கில் புதிய சாதனை..!


ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களை கடந்து சுப்மன் கில் புதிய சாதனை..!
x

Image Courtesy : @BCCI

ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களை கடந்து சுப்மன் கில் புதிய சாதனை படைத்துள்ளார்.

தர்மசாலா,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 21-வது லீக் ஆட்டம் தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் இந்தியா-நியூசிலாந்து இடையிலான ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 50 ஓவர்கள் முடிவில் 273 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

இதனைத் தொடர்ந்து 274 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கி விளையாடி வருகிறது. இந்திய அணி 15.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்திருந்தபோது அதிக பனிமூட்டம் காரணமாக ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு, பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 46 ரன்களிலும், சுப்மன் கில் 26 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனிடையே இன்றைய ஆட்டத்தின் மூலம் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார்.

இதற்கு முன்பு தென் ஆப்பிரிக்க வீரர் அம்லா 40 போட்டிகளில் விளையாடி 2 ஆயிரம் ரன்களை கடந்ததே அதிகபட்ச சாதனையாக இருந்தது. இந்நிலையில் இந்திய அணிக்காக 38 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ள சுப்மன் கில், அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களை கடந்து அம்லாவின் சாதனையை முறியடித்துள்ளார்.

1 More update

Next Story