பெண்கள் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சாதனைப் படைத்த ஸ்மிருதி மந்தனா- ஷபாலி வர்மா ஜோடி


பெண்கள் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சாதனைப் படைத்த ஸ்மிருதி மந்தனா- ஷபாலி வர்மா ஜோடி
x

Image Courtesy: @BCCIWomen

இந்தியா - தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் சென்னையில் நடைபெற்று வருகிறது.

சென்னை,

இந்தியா - தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது.

இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஷபாலி வர்மா- ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி சதம் விளாசினர். இந்தியா 292 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. ஸ்மிரிதி மந்தனா 161 பந்தில் 149 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 292 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்த இணை பெண்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை ஒன்றை படைத்துள்ளது.

இதற்கு முன்னதாக பெண்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் விக்கெட்டுக்கு 250 ரன்களுக்கு மேல் அடித்தது கிடையாது. தற்போது 292 ரன்கள் விளாசி மந்தனா- ஷபாலி வர்மா ஜோடி புதிய சாதனைப் படைத்துள்ளது.

1 More update

Next Story