உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பட்டம் வெல்லும் அணிக்கு இத்தனை கோடி பரிசா...!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
லண்டன்,
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோத உள்ளன. இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கான பரிசுத்தொகை எவ்வளவு என்பது குறித்து பார்க்கலாம்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.31¼ கோடியாகும். இதில் மகுடம் சூடும் அணி ரூ.13¼ கோடியை பரிசாக அள்ளும். 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.6½ கோடி கிடைக்கும்.
அத்துடன் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தை பிடித்த அணிக்கு ரூ.3¾ கோடியும், 4-வது இடத்தை பெற்ற அணிக்கு ரூ.2¾ கோடியும், 5-வது இடத்தை பிடித்த அணிக்கு ரூ.1½ கோடியும் வழங்கப்படுகிறது.
Related Tags :
Next Story