அதிரடியில் மிரட்டிய ஸ்டிர்லிங்: வங்கதேசத்தை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்ற அயர்லாந்து...!
வங்கதேசம் - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி சட்டோகிராமில் இன்று நடைபெற்றது.
சட்டோகிராம்,
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் அயர்லாந்து கிரிக்கெட் அணி முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்தது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் இரு ஆட்டங்களில் அயர்லாந்து வெற்றி பெற்று தொடரி ஏற்கனவே கைப்பற்றி விட்டது.
இந்நிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 3வது டி20 போட்டி சட்டோகிராமில் இன்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய வங்காளதேச அணி அயர்லாந்து அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
முதல் இரு டி20 ஆட்டங்களில் அதிரடி காட்டிய வங்கதேச பேட்ஸ்மேன்கள் இந்த ஆட்டத்தில் ஜொலிக்க தவறினர். அந்த அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷமிம் ஹொசைன் 51 ரன்கள் எடுத்தார். அயர்லாந்து தரப்பில் மார்க் அடெய்ர் 3 விக்கெட்டும், மேத்யூ 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து அணி களம் புகுந்தது.
அந்த அணியில் கேப்டன் பால் ஸ்டிர்லிங் அதிரடியில் மிரட்டினார். அவர் 41 பந்தில் 77 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இறுதியில் அந்த 14 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 126 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றாலும் முதல் இரு ஆட்டங்களில் வங்கதேச அணி வென்றதால் 2-1 என்ற கணக்கில் வங்கதேசம் தொடரை கைப்பற்றியது.
அடுத்ததாக இவ்விரு அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி ஏப்ரல் 4ம்தேதி தொடங்குகிறது.