ரூ.16.25 கோடிக்கு ஏலம் எடுத்த ஸ்டோக்ஸ் இங்கிலாந்து புறப்பட்டார்...அதிரடி பேட்ஸ்மேன் இல்லாமல் பிளே ஆப் செல்லும் சிஎஸ்கே...!


ரூ.16.25 கோடிக்கு ஏலம் எடுத்த ஸ்டோக்ஸ் இங்கிலாந்து புறப்பட்டார்...அதிரடி பேட்ஸ்மேன் இல்லாமல் பிளே ஆப் செல்லும் சிஎஸ்கே...!
x

Image Courtesy: Instagram stokesy

நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாட சிஎஸ்கே அணியால் ஸ்டோக்ஸ் ரூ.16.25 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

டெல்லி,

ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை எட்டி விட்டது. இன்று நடைபெறும் கடைசி கட்ட லீக் ஆட்டங்களில் மும்பை-ஐதராபாத், குஜராத்-பெங்களூரு அணிகள் மோத உள்ளன. சென்னை, குஜராத், லக்னோ அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன். பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் வரும் 23ம் தேதி சென்னையில் தொடங்க உள்ளன.

தோனி இந்த ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறுவார் என்று தகவல்கள் வெளிவரும் நிலையில் அவருக்கு சாம்பியன் பட்டத்தை பரிசளிக்க சென்னை அணியினர் தீவிரமாக முயற்சிப்பர். இந்நில்லயில், சென்னை அணிக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக சென்னை அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரும், அதிரடி ஆட்டக்காரருமான பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து திரும்பி உள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆட ரூ. 16.25 கோடிக்கு சென்னை அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட ஸ்டோக்ஸ் 2 ஆட்டங்களில் மட்டுமே ஆடினார். அதன் பின்னர் அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் போட்டிகளில் ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் ஜூன் மாதம் 1ம் தேதி அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குவதால், அந்த தொடருக்கு தயாரவதற்கும் அதன் பின்னர் ஆஷஸ் தொடர் நடைபெற உள்ளதால் அதற்காகவும் அவர் தாயகம் திரும்பி உள்ளார். பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




Next Story