விராட் கோலியுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள்...கேப்டனாக பாபர் ஆசம் 'பூஜ்ஜியம்' - பாக். முன்னாள் வீரர்


விராட் கோலியுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள்...கேப்டனாக பாபர் ஆசம் பூஜ்ஜியம் - பாக். முன்னாள் வீரர்
x

Image Courtesy: AFP 

விராட் கோலியுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள், கேப்டனாக பாபர் ஆசம் மிகப்பெரிய ‘பூஜ்ஜியம் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் கூறியுள்ளார்.

கராச்சி,

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி பாகிஸ்தான் மண்ணில் நடந்த டி20 தொடர் மற்றும் டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி அசத்தியது. சொந்த மண்ணில் பாகிஸ்தான் இரு தொடர்களையும் இழந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் முழுமையாக பாகிஸ்தான் இழந்தது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசமை இந்தியாவின் விராட் கோலியுடன் ஒப்பிடாதீர்கள் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

மக்கள் பாபர் ஆசமை விராட் கோலியுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள். அவ்வாறு பேசுவதை நிறுத்த வேண்டும். விராட்கோலி, ரோகித் சர்மா போன்றவர்கள் மிகப் பெரிய வீரர்கள். பாகிஸ்தான் அணியில் இவர்களுடன் (விராட், ரோகித்) ஒப்பிடக்கூஈய அளவுக்கு எவரும் இல்லை.

நீங்கள் அவர்களை பேச சொன்னால் அவர்கள் பெரிய ராஜா. ஆனால் நீங்கள் அவர்களிடம் இருந்து முடிவுகளை கேட்கும் போது அவை பூஜ்ஜியமாக உள்ளது என்றார்.

மேலும், பாபர் ஆசம் கேப்டனாக மிகப் பெரிய பூஜ்ஜியமாக உள்ளார். அவர் அணியை வழிநடத்துவதற்கு தகுதியானவர் அல்ல. குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அணியை வழிநடத்த அவருக்கு திறன் இல்லை. இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின் போது பென் ஸ்டோக்ஸ் மற்றும் மெக்கல்லம் ஆகியோரிடம் இருந்து கேப்டன் பதவியை கற்றுக்கொள்ள நல்ல வாய்ப்பு இருந்தது.

இல்லையெனில் அவர் தனது ஈகோவை விட்டுவிட்டு சர்பராஸ் அகமதுவிடம் கேப்டன் பதவி எப்படி செய்ய வேண்டும் என கேட்டிருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

உலக கிரிக்கெட்டில் பாபர் ஆசமை விராட் கோலியுடன் ரசிகர்கள் ஒப்பிட்டு வருகின்றனர். விராட் கோலி தற்போது சர்வதேச அளவில் அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலில் சச்சினுக்கு (100 சதம்) 2வது இடத்தில் (72 சதம்) உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 34 வயதான விராட் சர்வதேச அளவில் இதுவரை 24, 573 ரன்கள் குவித்துள்ளார்.

1 More update

Next Story