சையத் முஷ்டாக் அலி போட்டி: சிக்கிமை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தமிழகம்


சையத் முஷ்டாக் அலி போட்டி: சிக்கிமை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தமிழகம்
x

கோப்புப்படம் 

சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

லக்னோ,

15-வது சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இதில் லக்னோவில் நடந்த 'இ' பிரிவு ஆட்டம் ஒன்றில் தமிழக அணியும், சிக்கிம் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய சிக்கிம் அணி 20 ஓவர்கள் முடிவில் 79 ரன்னுக்கு சுருண்டது.

இதையடுத்து களமிறங்கிய தமிழக அணி 9.4 ஓவர்களில் இலக்கை கடந்து 9 விக்கெட் வித்தியாசத்தில் சிக்கிமை தோற்கடித்து 2-வது வெற்றியை ருசித்தது.

1 More update

Next Story