ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்; சிறந்த பீல்டருக்கான தங்கப்பதக்கத்தை கைப்பற்றிய விராட் கோலி..!


ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்; சிறந்த பீல்டருக்கான தங்கப்பதக்கத்தை கைப்பற்றிய விராட் கோலி..!
x

Image Grab on video posted by @bcci

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என இந்தியா முழுமையாக கைப்பற்றியது.

மும்பை,

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இந்த தொடரை 3-0 என இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. முதல் இரு ஆட்டங்களில் எளிதாக வெற்றி பெற்ற இந்திய அணி 3வது ஆட்டத்தில் 2 சூப்பர் ஓவர் வரை சென்று வெற்றி பெற்றது.

கடந்த 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இருந்து இந்தியாவில் சிறப்பாக செயல்படும் பீல்டருக்கு பிசிசிஐ தங்கப்பதக்கம் வழங்கி கவுரவித்து வருகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்பட்ட பீல்டருக்கான தங்கப்பதக்கம் யாருக்கு வழங்கப்பட்டது என பிசிசிஐ அறிவித்துள்ளது.

அதன்படி கடந்த சில மாதங்களாக டி20 போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடிக்காத இந்தியாவின் சீனியர் வீரரான விராட் கோலி இந்த தொடரின் சிறந்த பீல்டருக்கான விருதை வென்றுள்ளார்.


Next Story