இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்; ஆஸ்திரேலிய அணியில் மாற்றம்!
5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
சிட்னி,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய 3 போட்டிகளில் இருந்து ஆஸ்திரேலிய அணியில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஆடம் ஜாம்பா 3-வது ஆட்டத்திற்கு முன்பாக தாயகம் திரும்பியுள்ளனர். கிளன் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஜோஸ் இங்லிஸ் மற்றும் சீன் அபோட் ஆகிய வீரர்கள் கடைசி 2 போட்டிகளுக்கான அணியில் இருந்து விலகி தாயகம் திரும்ப உள்ளனர். பணிச்சுமை காரணமாக வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இவர்களுக்கு பதிலாக பென் மெக்டர்மோட், ஜோஷ் பிலிப், கிறிஸ் கிரீன் மற்றும் பென் துவர்ஷுயிஸ் ஆகியோர் எஞ்சிய போட்டிகளில் விளையாடுவர் என அறிவித்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது டி20 ஆட்டம் இன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.