இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்...ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு...!


இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்...ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு...!
x

Image Courtesy: @ICC 

தினத்தந்தி 28 Oct 2023 11:28 AM IST (Updated: 28 Oct 2023 11:29 AM IST)
t-max-icont-min-icon

ஆஸ்திரேலிய அணிக்கு மேத்யூ வேட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மெல்போர்ன்,

இந்தியாவில் தற்போது 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிவடைந்ததும் ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.

இந்த தொடரின் முதல் ஆட்டம் நவம்பர் 23ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த ஆஸ்திரேலிய அணிக்கு மேத்யூ வேட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அனுபவ வீரர்களான வார்னர், ஸ்மித், மேக்ஸ்வெல், ஸ்டோனிஸ், ஜாம்பா ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி விவரம்:-

மேத்யூ வேட் (கேப்டன்), ஜேசன் பெஹண்ட்டார்ப், சீன் அப்போட், டிம் டேவிட், நாதன் எல்லீஸ், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்க்லிஸ், ஸ்பென்சன் ஜான்சன், க்ளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மேட் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா.

போட்டி அட்டவணை:-

முதல் டி20 - நவம்பர் 23 - விசாகப்பட்டினம்

2வது டி20 - நவம்பர் 26 - திருவனந்தபுரம்

3வது டி20 - நவம்பர் 28 - கவுகாத்தி

4வது டி20 - டிசம்பர் 1 - நாக்பூர்

5வது டி20 - டிசம்பர் 3 - ஐதராபாத்


Next Story