இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்...ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு..!


இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்...ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு..!
x

Image Courtesy: @ACBofficials

தினத்தந்தி 6 Jan 2024 7:38 PM IST (Updated: 7 Jan 2024 7:29 PM IST)
t-max-icont-min-icon

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.

காபூல்,

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 11ம் தேதி தொடங்க உள்ளது. முதல் ஆட்டம் வரும் 11ம் தேதி மொகாலியிலும், 2வது ஆட்டம் வரும் 14ம் தேதி இந்தூரிலும், 3வது ஆட்டம் வரும் 17ம் தேதி பெங்களூருவிலும் நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு இப்ராகிம் ஜட்ரான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். யுஏஇ-க்கு எதிரான டி20 தொடரை தவறவிட்ட முஜீப் உர் ரஹ்மான் அணிக்கு திரும்பி உள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணி விவரம்; இப்ராகிம் ஜட்ரான் (கேப்டன்), ரஹ்மனுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), ஹஸ்ரத்துல்லா ஜசாய், ரஹ்மத் ஷா, நஜிபுல்லா ஜட்ரான், முகமது நபி, கரீம் ஜனத், அஸ்மத்துல்லா ஓமர்சாய், ஷரபுதீன் அஷ்ரப், முஜீப் உர் ரஹ்மான், பசல்ஹக் பரூக்கி, பரீத் அஹ்மத், நவீன் உல் ஹக், நூர் அகமது, முகமது சலீம், கைஸ் அகமது, குல்படின் நைப், ரஷித் கான்.



Next Story