அமீரக அணிக்கு எதிரான டி20 தொடர் - முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி


அமீரக அணிக்கு எதிரான டி20 தொடர் - முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி
x

Image Courtesy : @BLACKCAPS twitter

முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

துபாய்,

ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது. முதலாவது ஆட்டம் துபாயில் நேற்றிரவு அரங்கேறியது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 6 விக்கெட்டுக்கு 155 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக டிம் செய்பெர்ட் 55 ரன்களும், கோலே மெக்கோன்சி 31 ரன்களும் எடுத்தனர். அடுத்து களம் இறங்கிய ஐக்கிய அரபு அமீரகம் 19.4 ஓவர்களில் 136 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

இதன் மூலம் நியூசிலாந்து 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விக்கெட் கீப்பர் அரியான்ஷ் ஷர்மா அரைசதம் (60 ரன், 43 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசியும் பலன் இல்லை. நியூசிலாந்து கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான டிம் சவுதி 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அவரது சிறந்த பந்து வீச்சு இதுவாகும். 2-வது 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.


Next Story