டி20 உலகக்கோப்பை: இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோத வாய்ப்பு.... இது நடந்தால் போதும்...!


டி20 உலகக்கோப்பை: இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோத வாய்ப்பு.... இது நடந்தால் போதும்...!
x

டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத வாய்ப்பு உள்ளது.

மெல்போர்ன்,

8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதி வருகின்றன. இதில் குரூப்1-ல் லீக் சுற்று முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின.

இந்த நிலையில் குரூப்2-ல் இருந்து அரைஇறுதிக்குள் நுழையும் இரண்டு அணிகள் எவை? என்பதை நிர்ணயிக்கும் இறுதி கட்ட 3 லீக் ஆட்டங்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

டி20உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மீண்டும் மோதிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அரையிறுதி சுற்றுக்கு குரூப் 1லிருந்து நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன.

ஆனால் குரூப் 2வில் இன்னும் எந்த அணியும் அரையிறுதி வாய்ப்பை இறுதி செய்யவில்லை. இந்நிலையில், இந்தியாவும்,பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் மோதிக்கொள்ள என்ன நடந்தால் அந்த வாய்ப்பு மீண்டும் வரும் என்பதை காணலாம்.

தற்போது நான்கு புள்ளிகள் உடன் பாகிஸ்தான அணி மூன்றாம் இடத்தில் இருக்கிறது. பாகிஸ்தானை பொறுத்தவரை வங்கதேசத்தை வீழ்த்த வேண்டும். அதே சமயம் தென்னாப்பிரிக்க அணியை நெதர்லாந்து வீழ்த்தினால் பாகிஸ்தான் அரையிறுதி சுற்றுக்கு சென்று விடும்.

இந்தியாவைப் பொறுத்தவரை தென்னாப்பிரிக்கா தோற்றால் தானாக அரையிறுதி சுற்றுக்கு முன்னேறிவிடும். இல்லையெனில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்த வேண்டும். இது நடந்தால் இந்தியா, பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு சென்று விடும்.

இந்த நிலையில் அரையிறுதி சுற்றில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணியையும் இந்தியா,இங்கிலாந்து அணியையும் எதிர்கொள்ளும். அரையிறுதி சுற்றில் இந்தியாவும், பாகிஸ்தானும் அவர்களது போட்டியை வென்றால் வரும் 13 ஆம் தேதி இந்தியாவும், பாகிஸ்தானும் மீண்டும் மெல்போர்ன் மைதானத்தில் மோதிக்கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது.

அப்படி நடந்தால் நிச்சயம் சிறப்பாக இருக்கும் ஆனால் நடக்குமா பொறுத்திருந்து பார்ப்போம். இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றால் வியாழன் கிழமை அடிலெய்ட் மைதானத்தில் களமிறங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்பிரிக்கா - நெதர்லாந்து போட்டி = நெத்ர்லாந்து வெற்றி

பாகிஸ்தான் - வங்காளதேசம் = பாகிஸ்தான் வெற்றி

இந்தியா - ஜிம்பாப்வே = இந்தியா வெற்றி

இந்த போட்டிகளில் இதன் படி முடிவு கிடைத்தால் குரூப் 1ல் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளும், குரூப் 2ல் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும். அரையிறுதில் இந்திய அணி இங்கிலாந்தையும், பாகிஸ்தான் அணி நியூசிலாந்தையும் எதிர் கொள்ள வேண்டிவரும்.

இந்த போட்டிகளில் இந்தியாவும், பாகிஸ்தானும் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எதிர் கொள்ள வேண்டிய நிலைவரும்.


Next Story