டி20 உலகக்கோப்பை; ஷிவம் துபேவுக்கு பதிலாக இவர் விளையாடி இருக்க வேண்டும் - அம்பத்தி ராயுடு


டி20 உலகக்கோப்பை; ஷிவம் துபேவுக்கு பதிலாக இவர் விளையாடி இருக்க வேண்டும் - அம்பத்தி ராயுடு
x

Image Courtesy: AFP

இந்த தொடரில் இந்திய அணி இதுவரை 2 லீக் ஆட்டங்களில் ஆடி இரண்டிலும் வெற்றி (அயர்லாந்து, பாகிஸ்தான்) பெற்றுள்ளது.

மும்பை,

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி இதுவரை 2 லீக் ஆட்டங்களில் ஆடி இரண்டிலும் வெற்றி (அயர்லாந்து, பாகிஸ்தான்) பெற்றுள்ளது.

இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் அமெரிக்காவை நாளை சந்திக்க உள்ளது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணி ஆடிய 2 ஆட்டங்களிலும் ரோகித் சர்மா உடன் விராட் கோலி தொடக்க ஆட்டக்காரராக ஆடினார்.

மேலும், நடைபெற்று வரும் இந்த டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரின் இந்தியாவின் முதல் இரண்டு போட்டிகளிலும் இடம்பெற்று விளையாடிய ஷிவம் துபே சற்று மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது அனைவருக்கும் ஏமாற்றத்தை அளிக்கும் விதமாக மாறியுள்ளது.ஐ.பி.எல் தொடரின் முதல் பாதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இரண்டாம் பாதியில் பார்மை இழந்தார்.

டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவர் அதன் பிறகு சற்று சொதப்பலான செயல்பாட்டையே வெளிப்படுத்தி வருகிறார். இதனால் அவரது இடம் குறித்த கேள்விகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இந்திய அணியின் ஆடும் லெவனில் ஷிவம் துபேவிற்கு பதிலாக சஞ்சு சாம்சன் விளையாடி இருக்க வேண்டும் என இந்திய முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தனது கருத்தை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, தற்போதைய டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவின் ஆடும் லெவனில் ஷிவம் துபேவுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் விளையாடி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். சஞ்சு சாம்சன் மிடில் ஆர்டருக்கு பொருத்தமான வீரராக இருப்பார். எனவே அவர் விளையாடி இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
  • chat