டி20 உலகக் கோப்பை: மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு


டி20 உலகக் கோப்பை:  மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு
x

15 வீரர்கள் கொண்ட தென் ஆப்பிரிக்கா அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

கேப்டவுன் ,

9-வது 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்க உள்ள 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை மே 1-ந் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்க உள்ள 15 வீரர்கள் கொண்ட தென் ஆப்பிரிக்கா அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா அணி:

ஐடன் மார்க்ரம், ஒட்னியல் பார்ட்மேன், ஜெரால்ட் கோட்ஸி, குயின்டன் டி காக், ஜார்ன் போர்டுயின், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மஹாராஜ், டேவிட் மில்லர், அன்ரிச் நார்ட்ஜே, ககிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், தப்ரைஸ் ஷம்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ்.

ரிசர்வ் வீரர்கள்: நந்த்ரே பர்கர் ,லுங்கி என்கிடி. .


Next Story