டி20 உலகக்கோப்பை தொடர்; பவர் பிளேவில் அதிக ரன்கள் - சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ்


டி20 உலகக்கோப்பை தொடர்; பவர் பிளேவில் அதிக ரன்கள் - சாதனை படைத்த வெஸ்ட் இண்டீஸ்
x

Image Courtesy: AFP

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.

செயிண்ட் லூசியா,

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் இந்திய நேரப்படி இன்றுடன் நிறைவு பெற்றன. லீக் சுற்றின் முடிவில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறின.

லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் இன்று வெஸ்ட் இண்டீஸ் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிக்கோலஸ் பூரனின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 218 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 219 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 16.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 114 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 104 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கில் புதிய சாதனை ஒன்றை செய்துள்ளது. அதாவது, வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் செய்த போது பவர்பிளேவான முதல் ஆறு ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 92 ரன்கள் குவித்தது.

இதன் மூலம் டி20 உலகக்கோப்பை வரலாற்றில் பவர்பிளேவான முதல் ஆறு ஓவர்களில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற சாதனையை வெஸ்ட் இண்டீஸ் (92 ரன் - 2024) படைத்துள்ளது.

டி20 உலகக்கோப்பை வரலாற்றில் முதல் ஆறு ஓவர்களில் அதிக ரன்கள் அடித்த அணிகள் விவரம்:

வெஸ்ட் இண்டீஸ் - 92 ரன் (ஆப்கானிஸ்தானுக்கு எதிராக, 2024)

நெதர்லாந்து - 91 ரன் (அயர்லாந்துக்கு எதிராக, 2014)

இங்கிலாந்து - 89 ரன் (தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 2016)

தென் ஆப்பிரிக்கா - 83 ரன் (இங்கிலாந்துக்கு எதிராக, 2016)

இந்தியா - 82 ரன் (ஸ்காட்லாந்துக்கு எதிராக, 2021)


1 More update

Next Story