வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு


வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடர்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு
x

image courtesy; AFP

இந்த டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணிக்கு மிட்செல் மார்ஷ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிட்னி,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் , 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை நடைபெற உள்ளது.

டெஸ்ட் தொடர் நிறைவடைந்ததும் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் இறுதியில் இவ்விரு அணிகளுக்கு இடையே டி20 தொடர் நடைபெற உள்ளது. ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டி20 தொடருக்கான 14 வீரர்கள் கொண்ட ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டி20 அணிக்கு மிட்செல் மார்ஷ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டேவிட் வார்னர், மேக்ஸ்வெல் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் டி20 அணிக்கு திரும்பியுள்ளனர். இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி பிப்ரவரி 9-ம் தேதி நடைபெற உள்ளது.

ஆஸ்திரேலிய அணி விவரம் பின்வருமாறு;-

மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சீன் அபோட், ஜேசன் பெர்ஹெண்ட்ராப், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், கிளென் மேக்ஸ்வெல், மாட் ஷார்ட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட், டேவிட் வார்னர் மற்றும் ஆடம் ஜாம்பா.


Next Story