ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்; முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 266 ரன்கள்


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்; முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 266 ரன்கள்
x

image courtesy; twitter/@ICC

ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

பிரிஸ்பேன்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் , 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலிய பந்துவீச்சை திறம்பட சமாளித்து ரன்களை சேர்த்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 89.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 266 ரன்கள் அடித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜோஷ்வா டி சில்வா 79 ரன்களும், கவேம் ஹாட்ஜ் 71 ரன்களும் அடித்தனர். ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

நாளை 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. கெவின் சின்க்ளேர் 16 ரன்களுடன் களத்தில் உள்ளார்.


Next Story