அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட்; ஜிம்பாப்வே அணி அறிவிப்பு


Test against Ireland; Zimbabwe team announcement
x

Image Courtesy: @ICC

அயர்லாந்துக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டிக்கான ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹராரே,

சிக்கந்தர் ராசா தலைமையிலான ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி தற்போது சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 3 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

இந்த தொடர் நிறைவடைந்ததும் ஜிம்பாப்வே அணி அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 25ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான ஜிம்பாப்வே அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்த அணிக்கு கிரெக் எர்வின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவுக்கு எதிரான தொடரில் இடம் பெறாத சீனியர் வீரர் சீன் வில்லியம்ஸ் டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளார். சிக்கந்தர் ராசா அணியில் இடம் பெறவில்லை.

ஜிம்பாப்வே அணி விவரம்: கிரெக் எர்வின் (கேப்டன்), பிரையன் பென்னட், ஜொனாதன் காம்ப்பெல், டெண்டாய் சதாரா, தனகா சிவாங்கா, ஜாய்லார்ட் கும்பி, ராய் கையா, கிளைவ் மடாண்டே, வெலிங்டன் மசகட்சா, பிரின்ஸ் மஸ்வௌரே, பிளெசிங் முசரபானி, டியான் மியர்ஸ், ரிச்சர்ட் நகரவா, விக்டர் நியாச்சி, சீன் வில்லியம்ஸ்.


1 More update

Next Story