டெஸ்ட் கிரிக்கெட்; சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை சமன் செய்த ஜோ ரூட்....!


டெஸ்ட் கிரிக்கெட்; சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை சமன் செய்த ஜோ ரூட்....!
x

Image Courtesy: AFP

தினத்தந்தி 30 July 2023 4:42 AM GMT (Updated: 30 July 2023 5:11 AM GMT)

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

லண்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 4 ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி 2 ஆட்டத்திலும், இங்கிலாந்து 1 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டிரா ஆனது.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 5வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 27ம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் முதலில் இங்கிலாந்து பேட்டிங் ஆடியது. அதன்படி இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 283 ரன்களும், ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சில் 295 ரன்களும் எடுத்தன.

இதையடுத்து 12 ரன்கள் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி நேற்றைய 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 389 ரன்கள் குவித்துள்ளது. ஆஸ்திரேலிய அணி பெற்ற 12 ரன் முன்னிலையை கழித்து பார்த்தால் இதுவரை இங்கிலாந்து 377 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஜோ ரூட் முதல் இன்னிங்சில் 5 ரன்னும், 2வது இன்னிங்சில் 91 ரன்னும் எடுத்தார். அவர் இந்த தொடரில் 5 ஆட்டங்களில் ஆடி 412 ரன்கள் குவித்துள்ளார். இந்த ரன் குவிப்பின் மூலம் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை ஜோ ரூட் சமன் செய்துள்ளார்.

அதாவது, டெஸ்ட் தொடரில் அதிக முறை 300+ ரன்கள் குவித்த சச்சின் டெண்டுல்கரின் (19 முறை) சாதனையை ஜோ ரூட் சமன் செய்துள்ளார்.

டெஸ்ட் தொடரில் அதிக முறை 300+ ரன்கள் அடித்த வீரர்கள்:-

சச்சின் டெண்டுல்கர் - 19 முறை

ஜோ ரூட் - 19 முறை

ராகுல் டிராவிட் : 18 முறை

பிரையன் லாரா : 18 முறை

ரிக்கி பாண்டிங் : 17 முறை

அலெஸ்டர் குக் : 17 முறை


Next Story