டெஸ்ட் கிரிக்கெட்; இந்திய அணிக்கு எதிராக அதிக சதம்.. வரலாற்று சாதனை படைத்த ஜோ ரூட்


டெஸ்ட் கிரிக்கெட்; இந்திய அணிக்கு எதிராக அதிக சதம்.. வரலாற்று சாதனை படைத்த ஜோ ரூட்
x

Image Courtesy: AFP

இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று தொடங்கியது.

ராஞ்சி,

இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராலியும், பென் டக்கெட்டும் களமிறங்கினர்.

இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருந்தாலும் அறிமுக வீரர் ஆகாஷ் தீப் இங்கிலாந்தின் முதல் மூன்று பேட்ஸ்மேன்களை வீழ்த்தினார். இதில் கிராவ்லி 42 ரன், டக்கட் 11 ரன், போப் 0 ரன்னுக்கு ஆட்டம் இழந்தனர்.

இதையடுத்து அனுபவ வீரர் ஜோ ரூட் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுமுனையில் பேர்ஸ்டோ 38 ரன், ஸ்டோக்ஸ் 3 ரன், போக்ஸ் 47 ரன், ஹார்ட்லி 13 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து ராபின்சன் களம் இறங்கினார். நிதான ஆட்டத்தை வெளிபடுத்திய ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார். இந்த தொடரில் அவரது முதல் சதம் இதுவாகும். இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து 90 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து தரப்பில் ஜோ ரூட் 106 ரன், ராபின்சன் 31 ரன் எடுத்து களத்தில் உள்ளனர். இந்தியா தரப்பில் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம் நாளை நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஜோ ரூட் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அது என்னவென்றால் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரர்களில் ரூட் முதல் இடத்தை பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

இந்திய அணிக்கு எதிராக அவர் 10 சதங்களை விளாசியுள்ளார். இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட்டில் அதிக சதம் விளாசிய வீரர்களில் 2 முதல் 5 இடங்கள் முறையே ஸ்டீவ் ஸ்மித் (9 சதம்), கேரி சோபர்ஸ் (8 சதம்), விவ் ரிச்சார்ட் (8 சதம்), ரிக்கி பாண்டிங் (8 சதம்) ஆகியோர் உள்ளனர்.

1 More update

Next Story