தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தோல்வி...டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் பெரும் சரிவை சந்தித்த இந்தியா...!


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தோல்வி...டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் பெரும் சரிவை சந்தித்த இந்தியா...!
x

Image Courtesy: @ICC

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

துபாய்,

2023-2025ம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரிலிருந்து தொடங்கியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ்-க்கு எதிராக தனது தொடக்க தொடரை ஆடியது.

2 போட்டிகள் கொண்ட அந்த தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. 1 போட்டி டிரா ஆனது. அதன் பின்னர் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

மேலும், பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த இரு டெஸ்ட் போட்டிகளின் முடிவை அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

அதில் தென் ஆப்பிரிக்கா (100%) முதல் இடத்திலும், நியூசிலாந்து (50%) 2ம் இடத்திலும், ஆஸ்திரேலியா (50%) 3ம் இடத்திலும், வங்காளதேசம் (50%) 4ம் இடத்திலும், பாகிஸ்தான் (45.83%) 5ம் இடத்திலும், இந்தியா (38.89%) 6ம் இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் (16.67%) 7ம் இடத்திலும், இங்கிலாந்து (15%) 8ம் இடத்திலும், இலங்கை (0%) 9ம் இடத்திலும் உள்ளன.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த பின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் பெரும் சரிவை சந்தித்த இந்திய அணி 6வது இடத்திற்கு சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story