நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இலங்கை அணி அறிவிப்பு...!


நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இலங்கை அணி அறிவிப்பு...!
x

Image Courtesy: @ICC

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியில் மேத்யூஸ், சண்டிமால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

கொழும்பு,

நியூசிலாந்து அணி தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் ஆடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது போட்டியில் தோல்வியுற்ற அந்த அணி 2வது போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய போராடி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ் தொடருக்கு பின்னர் அந்த அணி இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொந்த மண்ணில் ஆட உள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாம்பியனான நியூசிலாந்து அணி இந்த முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போனது. தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டியில் ஆட வாய்ப்புகள் அதிகமா உள்ளன. அதே வேளையில் இறுதிப்போட்டிக்கு முன்னேற இலங்கை அணிக்கும் ஒரு சிறிய அளவில் வாய்ப்பு உள்ளது. அதற்கு முதலாவதாக அந்த அணி நியூசிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முதலில் முழுமையாக கைப்பற்ற வேண்டும். அதன் பின்னர் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்குள் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் முடிவை பொறுத்து இலங்கை அணியின் இறுதிப்போட்டி வாய்ப்பு முடிவாகும்.

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக திமுத் கருணாரத்னே தலைமையிலான அணியை அறிவித்துள்ளது. அந்த அணியில் மூத்த வீரர்கள் மேத்யூஸ் மற்றும் சண்டிமால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி விவரம்:-

திமுத் கருணாரத்ன (கேபடன்), ஓஷாத பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்சய டி சில்வா, தினேஷ் சண்டிமால், கமிந்து மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்லா, நிஷான் மதுஷ்கா, ரமேஷ் மெண்டிஸ், பிரபாத் ஜெயசூரியா, சாமிக்க கருணாரத்னா, கசுன் ராஜிதா, லஹிரு குமாரா, அசித்த பெர்னாண்டோ, விஷ்வா பெர்னாண்டோ, மிலன் ரத்நாயக்கா.



Next Story