ஆஷஸ் தொடர்; இங்கிலாந்து அணியில் இளம் சுழற்பந்து வீச்சாளர்....!

Image Courtesy: @englandcricket
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
லண்டன்,
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த ஆட்டத்தின் போது சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான மொயின் அலிக்கு விரல் பகுதியில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில் ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி வரும் 28-ம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.
அதற்குள் மொயின் அலி, காயத்தில் இருந்து குணமடைவது சந்தேகம் என்று கூறப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு இங்கிலாந்து அணியில் 18 வயதான சுழற்பந்து வீச்சாளர் ரெஹான் அகமது சேர்க்கப்பட்டுள்ளார். ரெஹான் அகமது கடந்த டிசம்பர் மாதம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான விளையாடி இருந்தார்.
Related Tags :
Next Story






