இந்தியா-அயர்லாந்து இடையிலான முதலாவது டி20 போட்டி... மழை காரணமாக ஆட்டம் பாதிக்க வாய்ப்பு...!


இந்தியா-அயர்லாந்து இடையிலான முதலாவது டி20 போட்டி... மழை காரணமாக ஆட்டம் பாதிக்க வாய்ப்பு...!
x

Image Courtesy: @BCCI

இந்தியா-அயர்லாந்து இடையிலான முதலாவது டி20 போட்டி மழை காரணமாக பாதிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டப்ளின்,

அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று இரவு நடைபெற உள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணிக்கு பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி அயர்லாந்துக்கு சென்றுள்ளது. இந்நிலையில் இந்தியா-அயர்லாந்து இடையிலான முதலாவது டி20 போட்டி மழை காரணமாக பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி மாலை 3 மணி நிலவரப்படி 68% மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், மாலை 4 மணிக்கு 88% மழைக்கும், மாலை 5 மணிக்கு 93% மழைக்கும், மாலை 6 மணி முதல் 8 மணி வரை 100% மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், 8 மணிக்கு பின்னர் 96% மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக முதல் டி20 போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

1 More update

Next Story