இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட்...மழை பெய்ய வாய்ப்பு - வெளியான தகவல்..!


இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட்...மழை பெய்ய வாய்ப்பு -  வெளியான தகவல்..!
x

 Image Courtesy: PTI

இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

செஞ்சூரியன்,

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. ஒருநாள் தொடரை 2-1 என இந்திய அணி கைப்பற்றியது.

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை தொடங்க உள்ளது. இந்நிலையில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் செஞ்சூரியனில் நாளை 80% இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவிக்கிறது.

முதல் நாள் ஆட்டம் பாதிக்கும் மேல் தடைபடுவதற்கு வாய்ப்புள்ளது. அதே போல 2வது நாளிலும் சராசரியாக 60% வாய்ப்புள்ளதால் மழை விட்டுவிட்டு வந்து சில மணி நேரங்கள் தடை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாம் நாளில் மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் ஆனால் 4ம் நாளில் 30% மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இறுதியாக கடைசி நாளில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை என கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த வானிலை அறிக்கையின் படி குறைந்தது 2 நாட்கள் மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதால் இப்போட்டி முழுமையாக நடைபெற்று முடிவு கிடைக்குமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.


Next Story