ஐபிஎல் இறுதி போட்டியில் கலை நிகழ்ச்சிகள் - ரசிகர்கள் மகிழ்ச்சி...!


ஐபிஎல் இறுதி போட்டியில் கலை நிகழ்ச்சிகள் - ரசிகர்கள் மகிழ்ச்சி...!
x

Image Courtesy:@ChennaiIPL/@IPL

ஐபிஎல் இறுதி போட்டியில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

அகமதாபாத்,

ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இறுதி போட்டிக்கு சென்னை அணி ஏற்கனவே முன்னேறி உள்ளது.

இன்று நடைபெறும் 2-வது தகுதிசுற்று போட்டியில் குஜராத் மற்றும் மும்பை அணிகள் மோத உள்ளன, இதில் வெற்றி பெறும் அணி இறுதிபோட்டியில் சென்னை அணியை சந்திக்கும்.

இறுதிபோட்டியானது அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மே28 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்நிலையில் இதனை மேலும் சிறப்பிக்கும் விதத்தில் , ஐபிஎல் தொடக்கவிழாவை போன்று இறுதி போட்டியிலும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் பவர்-பக்டு நிகழ்ச்சியை மக்களுக்கு கொடுக்கும் விதத்தில் பிரபல இசை கலைஞர்களான கிங் மற்றும் நியுகிலியா கலந்துகொள்ளவுள்ளனர். இவர்களின் நிகழ்ச்சி போட்டி தொடங்கும் முன் மாலை 6 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதைபோல் ஆட்டத்தின் இடைவெளியில் நடைபெறும் கலை நிகழ்ச்சியில் டிவைன் மற்றும் ஜோனிதா காந்தி பங்கேற்க்கின்றனர். இவ்வாறு ஐபிஎல் நிறுவாகம் அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Tags :
Next Story