பாகிஸ்தான்-நியூசிலாந்து இடையே கடைசி ஒரு நாள் போட்டி நாளை நடக்கிறது


பாகிஸ்தான்-நியூசிலாந்து இடையே கடைசி ஒரு நாள் போட்டி நாளை நடக்கிறது
x

பாகிஸ்தான்-நியூசிலாந்து இடையே கடைசி ஒரு நாள் போட்டி நாளை நடக்கிறது.

கராச்சி,

பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நேற்று நடந்தது. இதில் 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 49.5 ஓவர்களில் 261 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது.

ஒரு கட்டத்தில் ஒரு விக்கெட்டுக்கு 183 ரன்களுடன் (30 ஓவர்) 300-ஐ தாண்டுவது போல் சென்ற நியூசிலாந்தின் ஸ்கோர் டிவான் கான்வே (101 ரன், 92 பந்து, 13 பவுண்டரி, ஒரு சிக்சர்), கேப்டன் வில்லியம்சன் (85 ரன்) வீழ்ந்ததும் ரன்ரேட் வெகுவாக குறைந்து போனது.

பாகிஸ்தான் தரப்பில் முகமது நவாஸ் 4 விக்கெட்டும், நசீம் ஷா 3 விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர் 262 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணி 43 ஓவர்களில் 182 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 79 ரன் (114 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தார்.

79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்த நியூசிலாந்து அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்தது. அடுத்து தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் கடைசி ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது


Next Story