2023ஆம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ள வீரர்கள்...!


2023ஆம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றுள்ள வீரர்கள்...!
x

image courtesy; ICC

தினத்தந்தி 3 Jan 2024 6:23 PM IST (Updated: 3 Jan 2024 6:27 PM IST)
t-max-icont-min-icon

அதேபோல் 2023ஆம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கும் 4 பேரின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி 2023ஆம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் விருதுக்கு 4 வீரர்களின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது.

அதில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் , ஜிம்பாப்வே அணியின் ஆல் ரவுண்டர் சிக்கந்தர் ராசா, நியூசிலாந்தை சேர்ந்த மார்க் சாப்மேன் மற்றும் உகாண்டா அணியை சேர்ந்த அல்பேஷ் ராம்ஜானி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதேபோல் 2023ஆம் ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கும் 4 பேரின் பெயர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது. அதில் இலங்கை அணியின் கேப்டன் சாமரி அதபத்து, இங்கிலாந்து வீராங்கனை சோபி எக்லெஸ்டோன், வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த ஹேலி மேத்யூஸ் மற்றும் ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டரான எல்லிஸ் பெர்ரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


Next Story