ஐசிசி டி20 பந்து வீச்சாளர் தரவரிசையில் முதலிடத்தில் இந்திய இளம் வீரர்!

image courtesy; ICC
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் தொடர் நாயகன் விருது பெற்றார்.
துபாய்,
ஆண்கள் கிரிக்கெட் போட்டிக்கான டி20 பந்து வீச்சாளர் தரவரிசை பட்டியலை இன்று ஐசிசி வெளியிட்டது. இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருந்த ரஷித்கானை பின்னுக்கு தள்ளி இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
பிஷ்னோய் 699 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்தார். ரஷித்கான் 692 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். இந்திய அணி தரப்பில் பிஷ்னோய் மட்டுமே டாப் 10-ல் உள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் 5 போட்டிகளில் விளையாடிய ரவி பிஷ்னோய் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேட்ஸ்மேன்கள் மற்றும் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் முறையே சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷகிப் அல் ஹசன் மாற்றமின்றி முதலிடத்தில் தொடருகின்றனர்.
Related Tags :
Next Story






