இலங்கை நடத்தும் லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் ஜூலை 31ல் தொடங்கும் என அறிவிப்பு


இலங்கை நடத்தும் லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் ஜூலை 31ல் தொடங்கும் என அறிவிப்பு
x

கோப்புப்படம் 

லங்கா பிரீமியர் லீக் ஜூலை 31 ல் தொடங்கும் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொழும்பு,

இலங்கை கிரிக்கெட் சார்பில் ஆண்டுதோறும் லங்கா பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரானது நடைபெற்று வருகிறது. அதன் படி இந்த ஆண்டுக்கான 3 ஆவது டி20 லீக் தொடர் வரும் ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 21 வரை நடைபெறும் என்று ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதில் மொத்தமாக 24 ஆட்டங்கள் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில், ஹம்பாந்தோட்டையில் உள்ள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் கல்லே கிளாடியேட்டர்ஸ் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜாஃப்னா கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.


Next Story