எதிர்காலத்திற்கான திட்டம் இதுதான்...டேவிட் வார்னர் ஓபன் டாக் ...!


எதிர்காலத்திற்கான திட்டம் இதுதான்...டேவிட் வார்னர் ஓபன் டாக் ...!
x

image courtesy; AFP

டேவிட் வார்னர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

மெல்போர்ன்,

பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கு பின் ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார். மேலும், ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்ற வார்னர் சாம்பியன்ஸ் டிராபி அழைப்பு இருந்தால் விளையாடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா அணிக்காக வார்னர் 112 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,786 ரன்களும், 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6,932 ரன்களும் விளாசி இருக்கிறார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தாலும், டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடவுள்ளார்.

இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற டேவிட் வார்னர், தனது அடுத்தக்கட்ட திட்டங்கள் குறித்து பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

எதிர்காலத்தில் பயிற்சியாளராகும் ஆசை உள்ளது. ஆனால் இதுகுறித்து என் மனைவியிடம் ஆலோசிக்க வேண்டும். சில மாதங்கள் வெளியில் தங்க அவர் ஒப்புக் கொண்டால், நிச்சயம் அதற்காக முயற்சிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story
  • chat