டிஎன்பிஎல் எலிமினேட்டர் சுற்று : மதுரைக்கு 212 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நெல்லை


டிஎன்பிஎல் எலிமினேட்டர் சுற்று : மதுரைக்கு 212 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நெல்லை
x

டாஸ் வென்ற மதுரை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது

சேலம்,

7வது டிஎன்பிஎல் தொடர் இறுதிகட்டத்தை நெருங்கிவிட்டது. 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் இருந்து லைக்கா கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ் உள்ளிட்ட அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.

இதில் நேற்று இரவு நடைபெற்ற முதல் குவாலிபையர் ஆட்டத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி கோவை கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. டிராகன்ஸ் அணி குவாலிபையர் 2வது ஆட்டத்துக்கு தகுதி பெற்றது.

இந்நிலையில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி குவாலிபையர் 2வது ஆட்டத்துக்கு முன்னேறும். தோல்வி அடையும் அணி தொடரில் இருந்து வெளியேறும்.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற மதுரை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி நெல்லை அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் அருண் கார்த்திக்கும், சூர்யபிரகாசும் களமிறங்கினர். சூர்யபிரகாஷ், தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவுட்டாகி வெளியேறினார். அருண் கார்த்தி 18 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

அடுத்துவந்த அஜிதேஷ் குருசாமி சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து அவுட்டானார். நிதிஷ் ராஜகோபாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோர் உயர வழிவகை செய்தார். அவர் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் நெல்லை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற பெரிய இலக்குடன் மதுரை அணி விளையாடவுள்ளது.


Next Story