டிஎன்பிஎல்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு 121 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது திருப்பூர்


டிஎன்பிஎல்: சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு 121 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது திருப்பூர்
x

image courtesy: TNPL twitter

தினத்தந்தி 15 Jun 2023 9:05 PM IST (Updated: 15 Jun 2023 10:31 PM IST)
t-max-icont-min-icon

20 ஓவர்கள் முடிவில் திருப்பூர் தமிழன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்தது.

கோவை,

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் டி.என்.பி.எல். என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், 7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கோவையில் இன்று நடைபெறும் போட்டியில் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் மோதி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து திருப்பூர் அணியில் களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். அந்த அணியில் சிறப்பாக விளையாடிய ராதாகிருஷ்ணன் 36 ரன்களும் விஜய் சங்கர் 28 ரன்களும் எடுத்தனர்.

மேலும் ராஜேந்திரன் விவேக் 18 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இந்த நிலையில் 20 ஓவர்கள் முடிவில் திருப்பூர் தமிழன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங் செய்ய உள்ளது.


Next Story