டிஎன்பிஎல்: சேலம் ஸ்பார்டன்ஸ்-க்கு எதிராக டாஸ் வென்ற திருச்சி பேட்டிங் தேர்வு..!


டிஎன்பிஎல்: சேலம் ஸ்பார்டன்ஸ்-க்கு எதிராக டாஸ் வென்ற திருச்சி பேட்டிங் தேர்வு..!
x

Image Courtesy: @Ba11syTrichy

இன்றைய லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ் மற்றும் பால்சி திருச்சி ஆகிய அணிகள் மோதுகின்றன.

நத்தம்,

7-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் கோவையில் கடந்த 12-ந் தேதி தொடங்கியது. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

தொடரில் இதுவரை 6 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இந்நிலையில் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. அதன்படி மாலை 3.15 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் அபிஷேக் தன்வார் தலைமையிலான சேலம் ஸ்பார்டன்ஸ் அணி, கங்கா ஸ்ரீதர் ராஜூ தலைமையிலான பால்சி திருச்சி அணியை எதிர்கொள்கிறது.

இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற பால்சி திருச்சி அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.


Next Story