ஒரே வருடத்தில் இரண்டு ஐசிசி கோப்பைகளை இந்தியாவிடம் இருந்து பறித்த டிராவிஸ் ஹெட்..!
ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு டிராவிஸ் ஹெட் முக்கிய காரணமாக இருந்தார்.
அகமதாபாத்,
குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் டிராவிஸ் ஹெட்.
தொடக்க வீரரான இவர் 120 பந்தில் 15 பவுண்டரி, 4 சிக்சருடன் 137 ரன்கள் குறித்து ஆட்டமிழந்தார். இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு வந்த இந்திய அணியிடம் இருந்து உலகக் கோப்பையை பறித்துக் கொண்டார் என்றால் அது மிகையாகாது.
இது மட்டுமல்ல. கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இந்த போட்டியிலும் சதம் விளாசியதுடன், ஆட்ட நாயகன் விருது வெற்று இந்தியா தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப் போட்டியில் தோல்வியடைய காரணமாக இருந்தார். இதன்மூலம் ஒரே வருடத்தில் இரண்டு ஐசிசி கோப்பைகளை இந்தியாவிடம் இருந்து டிராவிஸ் ஹெட் பறித்துக்கொண்டார்.