முத்தரப்பு டி20 தொடர்: நேபாளம் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது நெதர்லாந்து


முத்தரப்பு டி20 தொடர்: நேபாளம் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது நெதர்லாந்து
x

நேற்று நடந்த இறுதிப்போட்டியில் நெதர்லாந்து, நேபாளம் அணிகள் மோதின

காத்மண்டு,

நெதர்லாந்து, நமீபியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகள் மோதும் முத்தரப்பு டி20 தொடர் நேபாளத்தில் நடைபெற்றது.நேற்று நடந்த இறுதிப்போட்டியில் நெதர்லாந்து, நேபாளம் அணிகள் மோதின. டாஸ் வென்ற நேபாளம் பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி, முதலில் ஆடிய நேபாளம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 184 ரன்கள் எடுத்தது. ஆசிப் ஷேக் 47 ரன்னும், குல்சன் ஜா 34 ரன்னும் எடுத்தனர்.

185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நெதர்லாந்து 19.3 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.தொடக்க ஆட்டக்காரர் லெவிட் அரை சதமடித்து 54 ரன்கள் எடுத்தார். சைப்ரண்ட் 48 ரன்னில் அவுட்டானார். இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற நெதர்லாந்து சாம்பியன் பட்டத்தை வென்றது.


Next Story