இரண்டு நாட்களில் முடிவடைவதெல்லாம் டெஸ்ட் போட்டிகளே கிடையாது - டேல் ஸ்டெயின்


இரண்டு நாட்களில்  முடிவடைவதெல்லாம் டெஸ்ட் போட்டிகளே கிடையாது - டேல் ஸ்டெயின்
x

image courtesy; AFP

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

கேப்டவுன்,

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இதில் இரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற டி20 தொடர் சமனில் முடிவடைந்த நிலையில், ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

அதன்பின் இவ்விரு அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆரம்பமானது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. பின்னர் கேப்டவுனில் நடைபெற்ற 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமனில் முடித்தது.

கேப்டவுனில் நடைபெற்ற இந்த போட்டி வெறும் 2 நாட்களிலேயே முடிவுக்கு வந்தது. இதனால் போட்டி ஆரம்பித்து இரண்டாவது நாளிலேயே நிறைவுக்கு வந்தது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக போட்டி நடந்த அந்த மைதானத்தின் மீது பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான டேல் ஸ்டெயின் இரண்டு நாட்களில் முடிவடைவதெல்லாம் டெஸ்ட் போட்டிகளே கிடையாது என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், விரிசல் விழுந்த ஆடுகளம் என்றால் ஏன் பயப்படுகிறீர்கள்? ஆஸ்திரேலியாவில் சிட்னி, பெர்த் நகரில் உள்ள மைதானங்களும் விரிசல் விழுந்த மைதானங்கள்தான். அந்த விரிசல்களுக்கு இடையே கார்களை கூட பார்க்கிங் செய்யலாம். ஆனால் அவர்கள் அங்கு நடைபெறும் போட்டிகளில் 4-5 நாட்கள் விளையாடி கடைசி வரை கொண்டு செல்கின்றனர். அதனால் மைதானத்தின் மீது எந்த ஒரு குறையும் சொல்வது தவறு. என்னை பொறுத்தவரை இரண்டு நாட்களில் முடிவடைவதெல்லாம் டெஸ்ட் போட்டிகளே கிடையாது' என்று கூறியுள்ளார்.


Next Story