டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள்: கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடித்தார் விராட் கோலி


டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள்: கிறிஸ் கெய்ல் சாதனையை முறியடித்தார் விராட் கோலி
x

Image Courtesy: PTI/ AFP 

டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மாவும் முன்னேற்றம் கண்டுள்ளார்.

சிட்னி,

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் இன்று நடைபெற்ற சூப்பர் 12 சுற்று ஆட்டத்தில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி கோலி, ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் பேட்டிங் அதிரடியால் 179 ரன்களை குவித்தது.

பின்னர் களமிறங்கிய நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 123 ரன்கள் மட்டுமே எடுத்தது, இதனால் இந்திய அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் 44 பந்துகளில் 62 ரன்கள் குவித்ததன் மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ் கெய்லை (965) பின்னுக்கு தள்ளி கோலி 2-வது இடத்துக்கு (989 ரன்கள்) முன்னேறியுள்ளார்.

இந்த பட்டியலில் இலங்கை வீரர் ஜெயவர்தனே 1016 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். அதே போல் இன்று அரைசதம் கடந்த ரோகித் இந்த பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறினார். அவர் இலங்கையின் தில்ஷனை (897 ரன்கள்) பின்னுக்கு தள்ளி இந்த பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:

1016 ரன்கள் - ஜெயவர்த்தனே (இலங்கை)

989* ரன்கள்- விராட் கோலி (இந்தியா)

965 ரன்கள் - கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்)

904* ரன்கள்- ரோஹித் சர்மா (இந்தியா)

897 ரன்கள்- திலகரத்ன தில்ஷன் (இலங்கை)

778* ரன்கள்- டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா)


Next Story