இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணன்?


இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணன்?
x

image courtesy; AFP

தினத்தந்தி 23 Nov 2023 6:57 AM GMT (Updated: 23 Nov 2023 7:10 AM GMT)

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை தொடர ராகுல் டிராவிட் விருப்பம் காட்டவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதில் இறுதிப்போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி 6-வது முறையாக 50 ஓவர் உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா கைப்பற்றி வரலாறு படைத்தது.

உலகக்கோப்பை தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் ஒப்பந்த காலம் முடிவுக்கு வந்தது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று தொடங்க உள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக விவிஎஸ் லட்சுமணன் செயல்படுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியை தொடர ராகுல் டிராவிட் விருப்பம் காட்டவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. டிராவிட் தொடராத பட்சத்தில் தலைமை பயிற்சியாளர் பதவியை விவிஎஸ் லட்சுமணன் ஏற்பார் என்ற கூடுதல் தகவலும் வெளியாகி உள்ளது.


Next Story