நாங்கள் ஒரு மிகச்சிறந்த அணியிடம் தோல்வியை சந்தித்துள்ளோம் - பென் ஸ்டோக்ஸ்


நாங்கள் ஒரு மிகச்சிறந்த அணியிடம்  தோல்வியை சந்தித்துள்ளோம் - பென் ஸ்டோக்ஸ்
x

image courtesy:AFP

இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 1-4 என்ற கணக்கில் இழந்தது.

தர்மசாலா,

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த தொடரின் கடைசி போட்டியிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, இங்கிலாந்தை இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி கைப்பற்றியது. அதோடு கடந்த 12 ஆண்டுகளாக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை தவறவிடாமல் இருக்கும் இந்திய அணி அந்த கவுரவத்தையும் காப்பாற்றிக்கொண்டது.

இந்நிலையில் இந்த தொடரில் படுதோல்வி அடைந்த இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5-வது போட்டி முடிந்ததும் அளித்த பேட்டியில் கூறியதாவது: 'இந்த தொடரில் நாங்கள் ஒரு மிகச்சிறந்த அணியிடம் விளையாடி தோல்வியை சந்தித்துள்ளோம். இதற்கு அடுத்து நிறைய போட்டிகள் வர இருப்பதால் அந்த போட்டிகளை கருத்தில் கொண்டு நாங்கள் இந்த தோல்வியிலிருந்து நகர உள்ளோம்.

இந்த தொடர் முழுவதுமே ஒவ்வொரு வீரரும் தனித்தனியாக நாங்கள் எந்த இடத்தில் தவறு செய்திருப்போம் என்பதை அறிந்திருப்பார்கள். எங்களால் எங்களுடைய சரியான செயல்பாட்டை இந்த தொடரில் வெளிப்படுத்த முடியவில்லை. அதேபோன்று இந்திய அணி பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டால் அதன் பிறகு பேட்ஸ்மேன்கள் வந்து மிகச்சிறப்பாக விளையாடுகிறார்கள். அந்த வகையில் நாங்கள் இன்னும் நிறைய முன்னேற்றத்தைக் காண வேண்டியது அவசியம்.

இந்த தொடர் முழுவதுமே எங்களது அணியை சேர்ந்த ஜாக் கிராலி மற்றும் பென் டக்கெட் ஆகியோர் மிகச்சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினர். அதேபோன்று பந்துவீச்சில் பஷீர் மற்றும் ஹார்ட்லி ஆகியோர் இந்த தொடர் முழுவதுமே மிகச்சிறப்பாக செயல்பட்டிருந்தனர். அதேபோன்று ஜோ ரூட்டும் இந்த தொடரில் இறுதி நேரத்தில் பார்முக்கு வந்துள்ளார். எனவே எதிர்வரும் கோடை காலத்தில் அவரது சிறப்பான ஆட்டத்தை காண காத்திருக்கிறோம். இந்த தொடர் ஒட்டு மொத்தமாகவே எங்களுக்கு ஒரு மிகச்சிறப்பான தொடராக அமைந்தது' என்று கூறினார்.


Next Story