ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் வெஸ்ட்இண்டீஸ் அணி சிறப்பான தொடக்கம்
வெஸ்ட்இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 51 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 112 ரன்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டது.
புலவாயோ,
வெஸ்ட்இண்டீஸ் -ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜிம்பாப்வேயில் உள்ள புலவாயோவில் நேற்று தொடங்கியது. 'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் கிரேக் பிராத்வெய்ட், தேஜ்நரின் சந்தர்பால் ஆகியோர் களம் இறங்கினர்.
நிதானமான ஆட்டத்தை கடைபிடித்த இருவரும் அரைசதத்தை கடந்ததுடன் நல்ல தொடக்கத்தை அமைத்தனர். வெஸ்ட்இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 51 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 112 ரன்கள் எடுத்து இருந்த போது மழை குறுக்கிட்டது. மழை தொடர்ந்து பலமாக பெய்ததால் முதல் நாள் ஆட்டம் அத்துடன் கைவிடப்பட்டது. பிராத்வெய்ட் 55 ரன்னுடனும், தேஜ்நரின் சந்தர்பால் 55 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடக்கிறது.
Related Tags :
Next Story